சேலம் : இலவச டயாலிசிஸ் கிட்டுகளை வெளியில் விற்று காசு பார்த்த அரசு மருத்துவமனை ஊழியர்!
சேலம் அரசு மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் கிட்டுகளை வெளி நோயாளிகளுக்கு விற்ற ஊழியர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரத்தம் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது.இங்கு தினமும் 30 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதற்காக, அரசு சார்பில் இலவசமாக கிட்டுகள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ரத்தம் சுத்திகரிப்பு நிலையத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர் நந்தகுமார் என்பவர் டயாலிசிஸ் செய்ய வரும் நோயாளிகளிடம் டயாலிசிஸ் கிட்டுகள் தீர்ந்து விட்டதாக கூறி விடுவதாகம அந்த டயாலிசிஸ் கிட்டுகளை வேறு சிலருக்கு விற்பதாகவும் புகார்கள் வந்தது.‘மேலும், ஒப்பந்த ஊழியர் நந்தகுமார் டயாலிசிஸ் கிட்டுகளை எடுத்து மறைத்து வைப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வாட்ஸ் அப்களில் பரவியது.
தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் டீன் பாலாஜிநாதன் ஒப்பந்த ஊழியர் நந்தகுமாரிடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் நந்தகுமார் டயாலிசிஸ் கிட்டுகளை வெளியில் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, ஒப்பந்த ஊழியர் நந்தகுமாரரை பணிநீக்கம் செய்து டீன் பாலாஜி நாதன் உத்தரவிட்டார்.
Comments