அஞ்சல் துறைக் கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அறிவிப்பு

0 4824
அஞ்சல் துறைக் கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அறிவிப்பு

தமிழ்நாடு வட்டத்துக்குட்பட்ட அஞ்சல் துறைக் கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வட்டத்தில் அஞ்சல் துறைக் கணக்கர் தேர்வுக்கு ஜனவரி 4 அன்று வெளியிட்ட அறிவிக்கையில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே எழுத முடியுமெனக் குறிப்பிட்டிருந்தது.

இந்தத் தேர்வைத் தமிழில் நடத்தக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்குக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் வெங்கடேசனுக்கு அஞ்சல் சேவைகள் வாரிய உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா எழுதியுள்ள கடிதத்தில், தமிழிலும் தேர்வு எழுதலாம் எனத் தெரிவு உள்ளதற்கான பின்னிணைப்பு அறிவிக்கை வெளியிட்டதன் சான்றை இணைத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments