காஷ்மீரில் தீவிரவாதிகள் தோண்டி வைத்திருந்த 150மீ நீளமுள்ள சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு
காஷ்மீரில் தீவிரவாதிகள் தோண்டி வைத்திருந்த 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கத்துவா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதர்களுக்கு நடுவே குழி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
25 முதல் 30 அடி ஆழத்தில், 3 அடி விட்டத்தில் சுமார் 150 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையை அவர்கள் கண்டறிந்தனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்த சுரங்கம் தோண்டப்பட்டிருந்தது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களில் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 3 வது சுரங்கப்பாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments