தமிழரின் கலாச்சாரம் இல்லாமல் இந்திய கலாச்சாரம் முழுமையடையாது - பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா
தொன்மையான மொழியாகத் தமிழ் விளங்குவதாகவும், தமிழரின் கலாச்சாரம் இல்லாமல் இந்திய கலாச்சாரம் முழுமையடையாது என்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தொன்மையான மொழியாகத் தமிழ் விளங்குவதாகவும், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உலகம் முழுமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்களால் பக்தி இலக்கியம் செழித்தோங்கியதாகவும் தெரிவித்தார். தமிழரின் கலாச்சாரம் இல்லாமல் இந்திய கலாச்சாரம் முழுமையடையாது எனவும் நட்டா குறிப்பிட்டார்.
Comments