நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் நாள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறும் என மத்திய நலவாழ்வு அமைச்சகம் அறிவிப்பு
நாடு முழுவதும் போலியோ ஒழிப்புக்காகச் சொட்டுமருந்து கொடுக்கும் முகாம் ஜனவரி 31ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் ஜனவரி 17ஆம் நாள் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16ஆம் நாள் தொடங்குவதால், போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாள் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31ஆம் நாள் நடைபெறும் என மத்திய நலவாழ்வு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதற்கு முந்தைய நாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கித் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்துள்ளது.
Comments