ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் கொண்டு செல்வதில் ஏற்பட்ட தகராறு: 2 பேருக்கு கத்திக் குத்து

0 3000

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் யார் வாடிவாசலுக்கு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கத்தியால் மாறி மாறி தாக்கிக் கொண்ட இருவர் காயமடைந்தனர்.

வாடிவாசலுக்கு பின்புறம், கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்த அருண்குமார், தேவேந்திரன் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்தது.

காயமடைந்த இருவரும், அருகிலேயே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவத்தின்போது சண்டையை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை  போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments