தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

0 30454
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் இந்தியாவில் வருகிற 19-ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 18 செ.மீ. மழையும், மணிமுத்தாறில் 16 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசுவதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments