தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவலர்களின் பணியே காரணம் - முதலமைச்சர்

0 1735
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவலர்களின் பணியே காரணம் - முதலமைச்சர்

காவல்துறையினர் நடத்திய பொங்கல் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவலர்களின் அளப்பரிய பணியே காரணமென பாராட்டு தெரிவித்தார்.

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை திடலில், சென்னை மாநகர காவல்துறையினர் குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடினர். இதற்காக கிராமம் போன்ற சூழல் உருவாக்கப்பட்டு, குடில்கள் அமைத்து, மாடுகளும் கட்டப்பட்டிருந்தன.

இந்த பொங்கல் விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி சந்தைகளை பார்வையிட்டார்.

பொங்கல் பானையில் அரிசி, வெல்லம் போட்டு பொங்கலை தொடங்கி வைத்தார். பின்னர் கயிறு இழுக்கும் போட்டியை தொடங்கி வைத்து, மாடுகளுக்கு பழங்களை அளித்தார்.

அதேபோல் காவலர்கள் குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்ட முதலமைச்சர், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப நமக்கு நிச்சயமாக வழி பிறக்க உள்ளது என்றார்.

விழாவில் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துக் கொண்ட இந்த விழாவில், குயிலாட்டம், கரகம், சிலம்பம், மல்லர் கம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதனை முதலமைச்சர் உள்ளிட்டோர் கண்டு கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments