அதிபர் டிரம்ப் தகுதி நீக்கத் தீர்மானம் நிறைவேறியது..! தீர்மானத்துக்கு ஆதரவாக 232 பேர் வாக்கு
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் மனு பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
இதுதொடர்பான தீர்மானத்தில் பேசிய சபாநாயகர் நான்சி பெலோஸி, டிரம்ப் பதவியில் நீடிப்பது அமெரிக்க ஜனநாயகத்திற்கே ஆபத்து என சாடினார். டிரம்பை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 பேரும் எதிராக 197 பேரும் வாக்களித்தனர்.
டிரம்பின் குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் 10 பேரும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து டிரம்பிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட முதல் அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments