வன்முறையை யார் செய்தாலும் அதற்கு ஆதரவு இல்லை - டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், எந்த வகையிலும் தாம் வன்முறையை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அன்றைய வன்முறைக்கு டிரம்ப்பே காரணம் என்று அவரை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள டிரம்ப், தமது ஆதரவாளர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சக அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் தமது கொள்கைக்கும் இலட்சியத்துக்கும் எதிரானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். வலதுசாரி, இடதுசாரி, ஜனநாயகக்கட்சி, குடியரசுக் கட்சி என எந்த அணியில் இருந்தாலும் வன்முறையை ஆதரிக்க கூடாது என்றும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்த வீடியோ பதிவில் தகுதி நீக்கத் தீர்மானம் பற்றி டிரம்ப் எதுவும் குறிப்பிடவில்லை.
Comments