நாடாளுமன்றம் புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடக்கம்
மகர சங்கராந்தி நன்னாளான இன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.
கடந்த 11ம் தேதி இதற்கான ஒப்புதலை பாரம்பரிய பராமரிப்பு கமிட்டி அளித்துள்ளது. உச்சநீதிமன்றமும் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளதையடுத்து இன்று கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன.
கடந்த டிசம்பர் 10ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டினார்.971 கோடி ரூபாய் செலவில் 22 மாதங்களில் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டுக் கூட்டம் நடைபெறும் போது அரங்கில் 1200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அமரும் வகையில் வசதி செய்யப்பட உள்ளது.
Comments