பறவைக் காய்ச்சல் எதிரொலி : டெல்லியில் கோழி இறைச்சி , முட்டை உணவு விற்பனைக்குத் தடை

0 1859

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, தலைநகர் டெல்லியில், பெரும்பாலான பகுதிகளில், கோழி இறைச்சி மற்றும் முட்டை உணவு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி பெருநகர மாநகராட்சியின், வசந்த் விஹார், லஜ்பத் நகர், கிரேட்டர் கைலாஷ், ரோஷ்நாரா கார்டன், காஷ்மீரி கேட், கீர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கும், கோழி உணவு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆப்பாயில் உட்பட அரைவேக்காட்டு முட்டை உணவுகளையும், பாதி வேகவைத்த கோழி இறைச்சி உணவுகளையும், தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என உணவகங்களுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments