இந்தியாவில் களம் இறங்குகிறது பிரபல டெஸ்லா நிறுவனம்

0 2174

உலகின் பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, அதன் கிளை நிறுவனத்தை இந்தியாவின் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் காற்று மாசைக் குறைக்கும் வகையில், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் ஊக்கமளித்து வருகின்றன. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் டெஸ்லா நிறுவனம், இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆட்டோமொபைல் உலகைப் புரட்டிப்போட்ட எலக்ட்ரிக் கார் நிறுவனமானது டெஸ்லா. இந்த நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் பெங்களூரில் கால் பதிக்க உள்ளது.

உலகின் நம்பர் 1 பணக்காரரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மாஸ்க், Tesla இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்( Tesla India Motors and Energy Private Limited ), என்ற பெயரில் பெங்களூரில் தனது நிறுவனத்தை உருவாக்க இருக்கிறார்.

இது தொடர்பான அறிக்கையில், இந்தநிறுவனமானது, மின்சார வாகனங்கள் தயாரிக்கும் விற்பனையை ஊக்குவிக்கும். மேலும் பாகங்கள், உபகரணங்கள், உள்ளிட்ட தயாரிப்புகள் இதில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பதிவுகளில், 3 பேரை தலைவராக அறிவித்துள்ளது . அதில் வைபவ் தனீஜா, வெங்கட்ராமன் ஸ்ரீராம், டேவிட் ஜான் ஃபெயின்ஸ்டெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்லா இந்தியாவில் முதற்கட்டமாக கார் விற்பனைக்காக மட்டுமே அலுவலகத்தை துவங்கியுள்ளது. பின்னாளில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் வெற்றியை அடிப்படையாக கொண்டு ஆராய்ச்சி தளம், விண்வெளி மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெஸ்லாவின் இந்தியா வருகையையொட்டி, மஹிந்திரா, மாருதி சுசூகி, ஹீண்டாய் ஆகிய முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் டெஸ்லாவின் இந்தியா வருகையை பலர் வரவேற்றாலும், சிலர் கலாய்த்து வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக பெங்களூரு நகரம் எப்போதும் வாகனங்கள் நெரிசல் மிகுந்து காணப்படும். அப்படி நெரிசல் மிகுந்த சாலைகளில் பெட்ரோல் டீசல் வாகனங்களே திக்கு முக்காடி போகும் நிலையில், டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் நிலைமை என்னவாகுமோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments