1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த துருக்கி நீதிமன்றம்...உல்லாச மதபோதகர் மீது வழக்கு

0 4026
துருக்கியில் மத போதகர் ஒருவருக்கு 1075  ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின் இஸ்தான்புல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
துருக்கியில் அங்காரா நகரத்தில் பிறந்தவர் பிரபல மத போதகர் அட்னான் அக்தார்.  இவர்  ஏ9 என்ற ஆன்லைன் தொலைக்காட்சி சேனலை நடத்தி வந்தார்.  அந்த சேனலின் வாயிலாக மத பிரசாரம் செய்தார்.  இந்த நிலையில், அவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
கடந்த 2018  ஆம் ஆண்டு அட்னான் அக்தாரும், அவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் உட்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு துருக்கி நீதிமன்றத்தில் கடந்த 2 வருடங்களாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில்,  அவரால்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் சிலருக்கு கருத்தடை மாத்திரைகள் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டதாக  அக்தார் மீது  பெண் ஒருவர் குற்றம்சாட்டினார். அதனை உறுதி செய்யும் விதமாக அக்தார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது 69,000 கருத்தடை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில், அட்னான் அக்தார் மீது  பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் ராணுவ தகவலை உளவு பார்ப்பது போன்ற பிரிவுகளின்  அடிப்படையில் துருக்கி நீதிமன்றம அக்தாருக்கு 1075  ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments