குற்றமிழைப்பதையே பழக்கமாகக் கொண்டவர் சோனு சூட்: மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி கருத்து

0 4282
குற்றமிழைப்பதையே பழக்கமாகக் கொண்டவர் சோனு சூட்: மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி கருத்து

குற்றமிழைப்பதையே பழக்கமாகக் கொண்டவர் சோனு சூடு என மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நடிகர் சோனு சூடு 6 தளங்கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றங்கள் செய்து உணவகமாக மாற்றியுள்ளதாகவும், உரிமம் இன்றி உணவகம் நடத்தி வருவதாகவும் மாநகராட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பான வழக்கில், மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில், சட்டவிரோதக் கட்டுமானங்களை 2018ஆம் ஆண்டு இடித்த பிறகும் சோனு சூடு கட்டுமானங்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

கட்டடத்தில் மாற்றம் செய்ய அனுமதி பெறவில்லை என்றும், உணவகம் நடத்த உரிமம் பெறவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments