தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த தோராய செலவு ரூ. 621 கோடி - சத்தியபிரதா சாகு

0 1943
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த தோராய செலவு ரூ. 621 கோடி - சத்தியபிரதா சாகு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கு தோராய செலவு தொகையாக 621 கோடி ரூபாயை மாநில அரசிடம் கேட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில்தான் தேர்தல் செலவுக்கு தோராய தொகையாக 621 கோடி ரூபாய் கேட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள அவர், எனவே இறுதிக்கட்டத்தில் தொகை மாறலாம் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments