அமெரிக்க அதிபர் டிரம்பின் சேனலை முடக்கிய யூடியூப்
கொள்கைகளை மீறி வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்டதை அடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சேனலை YouTube நிறுவனம் சஸ்பென்ட் செய்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நிகழ்த்திய நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக, கொள்கையை மீறிய செயல்பட்டதால் டிரம்பின் சேனலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யவும், நேரடி ஒளிபரப்புகளை மேற்கொள்ளவும் அதிபர் டிரம்பின் சேனலுக்கு விதிக்கப்பட்டுள்ள 7 நாட்கள் தடை மேலும் நீட்டிக்கபடலாம் எனவும் YouTube நிறுவனம் கூறியுள்ளது.
Comments