அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்த வழக்கு: பெண் குற்றவாளிக்கு மரண தண்டனை

0 3067
அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்த வழக்கு: பெண் குற்றவாளிக்கு மரண தண்டனை

மெரிக்காவில் 68 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண் கைதிக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தடைகளை அகற்றி அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த Lisa Montgomery என்பவர், Bobbie Jo Stinnett என்ற 23 வயது கர்ப்பிணிப் பெண்ணை கயிற்றால் கழுத்தை நெறித்து, பின்னர் கத்தியால் வயிற்றைக் கீறி கொலை செய்தார்.

இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்துக் கொண்டு தனது குழந்தை என Lisa Montgomery கூறிக் கொண்டார். இந்த வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவரது மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னதாக, 6 வயது சிறுவனைக் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக 1953ல் Bonnie Brown Heady என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments