மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே மீது பெண் பாலியல் புகார் : பொய் குற்றச்சாட்டு என அமைச்சர் தனஞ்சய் விளக்கம்

0 1100
மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே மீது பெண் பாலியல் புகார் : பொய் குற்றச்சாட்டு என அமைச்சர் தனஞ்சய் விளக்கம்

மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே மீது ஒரு பெண் பாலியல் பலாத்காரப் புகார் கூறியுள்ள நிலையில், அது பொய்யான குற்றச்சாட்டு என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை மாநகரக் காவல் ஆணையரிடம் பெண் அளித்துள்ள புகாரில், தனஞ்சய் முண்டே 2006ஆம் ஆண்டில் தன்னை முதல் முறையும் அதன்பின் பல முறையும் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தன்னை மிரட்டிப் பணம் பறிப்பதற்காகக் கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்றும், அந்தப் பெண் பணம் கேட்டு மிரட்டித் தனக்குக் குறுஞ்சேதிகள் அனுப்பியுள்ளதாகவும் தனஞ்சய் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்த பெண்ணின் சகோதரியுடன் தான் திருமணம் செய்யாமல் வாழ்ந்து இரு குழந்தைகள் பெற்றது உண்மைதான் என்றும், அது குறித்துத் தனது மனைவிக்கும் தெரியும் என்றும் தனஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments