நாளை பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு மற்றும் மஞ்சள் குலை விற்பனை விறுவிறுப்பு

0 1855
நாளை பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு மற்றும் மஞ்சள் குலை விற்பனை விறுவிறுப்பு

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு மற்றும் மஞ்சள் குலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு கரும்பு வரத்து குறைந்துள்ளதால் 20 கரும்புகள் கொண்ட பண்ருட்டி கரும்பு ஒரு கட்டு 400 ரூபாய்க்கும், மதுரை மேலூர் கரும்பு 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மேலும் மஞ்சள் குலை ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சராசரியாக 1000 லாரிகள் கரும்பு வரும் நிலையில் தற்போது 300 லாரிகளில் மட்டுமே கரும்பு வந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் கரும்பு விற்பனை செய்த 68 லாரிகளை கோயம்பேடு நிர்வாக அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments