ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு
ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தமது விருப்பத்தை ஐநா பொதுச்சபை தலைவர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி துஜாரிக் கூறினார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஐ.நா. பொதுச் செயலராக இருந்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ந்தேதி உடன் நிறைவடைகிறது.
Comments