பாபர் மசூதி இடிப்பு வழக்கு : 32 பேர் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணை
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு மூல காரணமாக இருந்தாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட தீர்ப்பில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகி உள்பட இருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு லக்னோ அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
Comments