2 வது தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பிறகு செயல்திறனை காண முடியும் - மத்திய சுகாதார துறை செயலாளர் தகவல்

0 1829
2 வது தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பிறகு செயல்திறனை காண முடியும் - மத்திய சுகாதார துறை செயலாளர் தகவல்

2-வது தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பின்னர்தான் தடுப்பூசியின் செயல்திறனை பார்க்க முடியும் என்று மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், கொரோனாவை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர்,  அதன் பின்னர்  14 நாட்களுக்கு கழித்து தான் தடுப்பூசியின் செயல்திறனை பார்க்க முடியும் என்றார்.

எனவே மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments