2 வது தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பிறகு செயல்திறனை காண முடியும் - மத்திய சுகாதார துறை செயலாளர் தகவல்
2-வது தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பின்னர்தான் தடுப்பூசியின் செயல்திறனை பார்க்க முடியும் என்று மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், கொரோனாவை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், அதன் பின்னர் 14 நாட்களுக்கு கழித்து தான் தடுப்பூசியின் செயல்திறனை பார்க்க முடியும் என்றார்.
எனவே மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Comments