பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா தாக்கப்பட்ட வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தானில் சீக்கிய வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்திய 3 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நானாசாகிப் குருத்வாராவின் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிலர் தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கு வந்திருந்த சீக்கிய யாத்ரீகள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை லாகூரில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியான இம்ரான் சிருஷ்டிக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற இரு குற்றவாளிகளான முகமது சல்மான், முகமது அகமது ஆகிய இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 4 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
Comments