சபலத்தில் பணத்தை இழந்த ரேசன் ஊழியர் சஸ்பெண்டு..! ரூ 5.60 லட்சத்துக்கு பொங்கலோ பொங்கல்
சென்னை கோயம்பேட்டில் சபலத்தால் பெண்களிடம் பொங்கல் பரிசுப் பணம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த கடை ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பேட்டில் உள்ள இரு ரேசன் கடைகளின் ஊழியராக இருந்தவர் பாஸ்கரன்.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டிய பணத்தை எடுத்து வரும் போது இரு பெண்கள் ஏமாற்றி பறித்துச்சென்றதாக புகார் அளித்தார்.
ரேசன் ஊழியர் பாஸ்கரன் புகார் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், காவல்துறையினர் குடிமைபொருள் துறையின் சூப்பிரண்டு ராஜேந்திரனை அழைத்து, பாஸ்கரனின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து விசாரித்து அறிந்தனர்.
இதில் ரேசன் ஊழியர் பாஸ்கரன், பொங்கல் பரிசு தொகுப்புக்கு கொடுப்பதற்காக 8 லட்சம் ரூபாய் கருவூலத்தில் இருந்து முந்தைய நாளே பெற்றுச்சென்றதும்.
தன்னை பார்த்து சிரித்து அழைத்த இரு பெண்கள் மீது கொண்ட சபலத்தால் அவர்களுடன் தனிமையில் தங்கி பொழுதை கழித்த பாஸ்கரனிடம் இருந்து அந்த இரு பெண்களும் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்து சென்றதும் தெரியவந்தது.
விரிவான விசாரணைக்கு பின்னர் சூப்பிரண்டு ராஜேந்திரனிடம், ரேசன் ஊழியர் பாஸ்கரன் செய்த சில்மிஷத்தை எல்லாம் காவல்துறையினர் விளக்கினர்.
பணத்தை ஏமாற்றிய இரு பெண்களையும் பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அரசு பணத்தை பெண்களுக்கு அள்ளிக்கொடுத்த பாஸ்கரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சூப்பிரண்டு ராஜேந்திரன் தெரிவித்தார்.
Comments