புனேவில் இருந்து ஒரே நாளில் 55 லட்சம் தடுப்பூசி மருந்து பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் அனுப்பிவைப்பு

0 2937
புனேவில் இருந்து ஒரே நாளில் 55 லட்சம் தடுப்பூசி மருந்து பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் அனுப்பிவைப்பு

கொரோனாவுக்கு எதிரான covishield தடுப்பூசிகள்  பல்வேறு மாநிலங்களுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை 206 ரூபாய் விலையில் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சீரம் இந்தியா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், புனேவில் இருந்து நேற்று விமானம் மூலமாக பெங்களூர் , டெல்லி, லக்னோ ,புவனேசுவர், கவுஹாத்தி .சென்னை உள்பட 13 முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்காக ஆறு சரக்கு விமானங்களுடன், இரண்டு பயணிகள் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன. விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து உடனடியாக குளிர்பதனப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. சரக்கு வாகனங்கள் மூலமாகவும் அந்த மருந்து குளிர்பதனப்பெட்டிகளில் அருகில் இருந்த மும்பை போன்ற முக்கியப் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

ஒரு கோடியே பத்துலட்சம் டோஸ் கோவிஷீல்டு ஆர்டர் கொடுக்கப்பட்டு முதல்கட்டமாக 55 லட்சம் டோஸ்கள் நேற்று மாலைவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நான்கு வார காலத்தில் 55 லட்சம் கோவாக்சினும் அனுப்பி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 16ம் தேதி முதல் மருத்துவத் துறையினருக்கும் முன்களப்பணியாளர்களுக்கும் முதல் கட்டமாக நான்கு கோடி பேருக்கு மருந்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இவை அவர்களுக்கு 200 ரூபாய் மற்றும் வரிகள் சேர்த்து 206 ரூபாய் விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 50 வயதுக்குள் இருக்கும் தீவிர நோய் பாதிப்புடையோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதன் பொருட்டு வெளிச்சந்தையில் 1000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பிரேசிலுக்கும் இதர நட்பு நாடுகளுக்கும் இந்த மருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments