அவசரகால மருத்துவத் தேவைகளுக்காக மட்டும் அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க இந்தியா திட்டம் எனத் தகவல்
இந்தியா தனது அண்டை நாடுகளின், அவசரகால மருத்துவத் தேவைகளுக்காக மட்டும், கொரோனா தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக அடிப்படையிலான, கொரோனா தடுப்பூசி விற்பனை குறித்து, பின்னர் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில், பாகிஸ்தான் நீங்கலாக, அண்டை நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையில், அவசர கால மருத்துவத் தேவைக்காக மட்டும், அண்டை நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments