சாலை விபத்தில் படுகாயமடைந்த ஸ்ரீபத் நாயக்கின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது - அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 2461

சாலை விபத்தில் படுகாயமடைந்த மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீபத் நாயக்கை சந்திப்பதற்காக, சிறப்பு விமானத்தில் கோவா சென்ற ராஜ்நாத்சிங், அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், தேவைப்பட்டால் ஸ்ரீபத் நாயக்கை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடாவில் ஸ்ரீபத் நாயக் சென்ற கார் விபத்தில் சிக்கியதில், அவரது மனைவியும், உதவியாளரும் திங்களன்று உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments