சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை காண 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தகவல்

0 1444

பரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மகர ஜோதி தரிசனம் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது என்றார். கொரோனா  காரணமாக தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்ற அவர், மகர ஜோதி தரிசனத்தை பார்க்கவும் சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில் 50 பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments