ரூ.251க்கு ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தி புகழடைந்த நொய்டா நபர்-200 கோடி ரூபாய் உலர்பழ வியாபார மோசடியில் கைது

0 7209
251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தி புகழடைந்த நொய்டா நபர், 200 கோடி ரூபாய் உலர்பழ வியாபார மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தி புகழடைந்த நொய்டா நபர், 200 கோடி ரூபாய் உலர்பழ வியாபார மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நொய்டாவை சேர்ந்த மோஹித் கோயல், ரிங்கிங் பெல்ஸ் என்ற கம்பெனியை தொடங்கி, Freedom 251 என்ற பெயரில் 251 ரூபாய்க்கு மொபைல் போன் என விளம்பரம் செய்தவர். இது பின்னர் மோசடி வேலை என தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். அந்த வழக்கும், மேலும் சில மோசடி வழக்குகளும் மோஹித் கோயல் மீது நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு வியாபாரிகளிடம் உலர் பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து, அதற்கு முறையாகப் பணம் கொடுக்காமல் ஏமாற்றிய விவகாரத்தில் மோஹித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 வெளிநாட்டுக்காரர்களை வேலைக்கு அமர்த்தி, அலுவலகத்திற்கு மாதம் 3 லட்ச ரூபாய் வாடகை கொடுத்து வந்த மோஹித் கோயலிடமிருந்து ஆடி கார், உலர் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments