வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி : பிரதமர் நரேந்திர மோடி

0 2096
பரம்பரை, பரம்பரையாகத் தொடரும், வாரிசு அரசியல், ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

பரம்பரை, பரம்பரையாகத் தொடரும், வாரிசு அரசியல், ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இந்த வாரிசு அரசியல், வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டும் என்றும், பிரதமர் சூளுரைத்திருக்கிறார். சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற தேசிய இளையோர் நாடாளுமன்ற விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குடும்ப பெயர்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அரசியலில் வெற்றிப்பெறுவோரின் அதிர்ஷ்டம் குறைந்து வருகிறது என்பது எதார்த்தமான உண்மையாக மாறியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அரசியலமைப்பில் புரையோடியுள்ள வாரிசு அரசியல் நோய் முழுமையாக இன்னும் அகற்றப்படவில்லை என்றும், பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments