மாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான விவகாரம்-தயாரிப்பாளர் சங்கம் மூலம் காவல் துறையிடம் புகாரளிக்க முடிவு
நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகளை இணையத்தில் வெளியான விவகாரம் தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் மூலம் காவல் துறையிடம் புகாரளிக்க மாஸ்டர் படக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது படத்தின் வெளியீட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், நாளை காவல் துறையில் புகாரளிக்க திட்டமிட்டுள்ளனர்.
மாஸ்டர் படத்தின் காட்சிகளை திரையரங்கின் புராஜக்டர்களுக்கு கன்வெர்ட் செய்து வழங்கும் பிரபல நிறுவனம் ஒன்றில் மாஸ்டர் படத்திற்கான வெளியீட்டு பணிகள் நடந்து வந்ததும், அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் மூலம் இந்த படக்காட்சிகள் வெளியானதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
Comments