மாஸ்டர் படத்துக்காக ஈஸ்வரன் படம் வெளிவராமல் முடக்க சதி- டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

0 9789
மாஸ்டர் பட வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படம் வெளிவராமல் முடக்க சதி நடப்பதாக சிம்புவின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாஸ்டர் பட வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படம் வெளிவராமல் முடக்க சதி நடப்பதாக சிம்புவின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தியாகராயநகர் இல்லத்தில் கண் கலங்கிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடைசி நேர கழுத்தறுப்பு மூலம் ஈஸ்வரன் படத்தை பொங்கலன்று ரிலீஸ் ஆகாமல் தடுக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டினார்.

ஈஸ்வரன் படம் வெளியாவதை தடுக்கக்கோரி கியூப் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளதாகவும், அமைச்சரின் ஆதரவு இருப்பதாக கூறி மிரட்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டிய அவர், ஆனால் சம்பந்தபட்ட அமைச்சர் தம்மிடம் அதை மறுத்ததாக கூறினார்.

விபிஎப் கட்டணம், கேளிக்கை வரி , ஜிஎஸ்டிக்கு எதிராக போராடியதால், மாஃபியாக்கள் சேர்ந்து தம்மை பழிவாங்கும் நோக்கில் படத்தை தடுக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments