போகி நாளில், பிளாஸ்டிக், ரப்பர், டயர் எரிக்கப்படுவதை தடுக்க சென்னை முழுவதும் கண்காணிக்க குழுக்கள்
சென்னையில் போகிப் பண்டிகை நாளில், பிளாஸ்டிக், ரப்பர், டயர் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்படுவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தைப் பொங்கலுக்கு முதல்நாளான போகிப் பண்டிகையின்போது பொதுமக்கள் பயன்பாடற்ற பழைய பொருட்களை அப்புறப்படுத்துதல் வழக்கமாகும்.
ஆனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பழைய பிளாஸ்டிக், டயர்கள் , ரப்பர் பொருட்கள் உள்ளிட்டவற்றை எரியூட்டும் பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக உருவெடுத்துள்ளது.
இதைத் தடுக்கும் நான்கு விழிப்புணர்வு வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம், தொடங்கி வைத்தார்.
Comments