கேரளாவை போன்று வரிச்சலுகையை தமிழகத்திலும் அறிவிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

0 2016
கேரளாவை போன்று வரிச்சலுகையை தமிழகத்திலும் அறிவிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

கேரளாவில் சொத்து வரி, கேளிக்கை வரி உள்ளிட்டவற்றில் சலுகளைகள் அறிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று, தமிழக அரசும் அறிவிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில், சொத்துவரி செலுத்த கால அவகாசம் வழங்கியிருப்பதையும், அங்கு மார்ச் 31ம் தேதி வரை கேளிக்கை வரி வசூலிக்கப்படாது என்று அறிவித்திருப்பது மற்றும் 10 மாதங்களுக்கான திரையரங்க மின்கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதைக்  குறிப்பிடுள்ளார். 

கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கையை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, சொத்து வரி,  மின்கட்டணச் சலுகை, கேளிக்கை வரி ஆகியவற்றில் தமிழக அரசும் சலுகைகளை அறிவிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments