வழக்குச் செலவுக்காக பணத்தை விடுவிக்கக் கோரிய மல்லையாவின் அவசர மனு இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரிப்பு

0 2045
வழக்குச் செலவுக்காக பணத்தை விடுவிக்கக் கோரிய மல்லையாவின் அவசர மனு இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரிப்பு

அவசரச் செலவினங்களுக்காக தனது பணத்தை விடுவிக்க வேண்டும் என தொழிலதிபர் மல்லையா விடுத்த கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.

தனது மீதான வழக்கை தொடர்ந்து நடத்தவும், இதர செலவினங்களுக்காகவும் இங்கிலாந்து வங்கியில் உள்ள 2 புள்ளி 9 மில்லியன் பவுண்ட் பணத்தில் 2 புள்ளி 8 மில்லியன் பவுண்ட் பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மல்லையா சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி, உடனடியாக பணத்தை விடுவிக்க மறுத்ததுடன், வழக்கை புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments