மகாராஷ்டிராவில் மருத்துவமனை தீ விபத்தில் 10 சிசுக்கள் உயிரிழப்பு.. விளக்கம் அளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

0 1401
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிசுக்கள் இறந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்துள்ள மனித உரிமைகள் ஆணையம், குழந்தைகள் விவகாரத்தில் இழப்பீடாக பணம் வழங்குவது மட்டும் போதாது என்றும், கவனக்குறைவு மற்றும் அலட்சியத்துடன் பணியாற்றியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 9ம் தேதி பந்தாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் சிசுக்கள் பிரிவில் ஏற்பட்ட தீயில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments