காஷ்மீரில் நடந்த போலி என்கவுண்டரில் ரொக்கமாக வெகுமதி வழங்கும் வழக்கம் இல்லை - இந்திய ராணுவம்
காஷ்மீரில் நடந்த போலி என்கவுண்டரில் ரொக்கமாக வெகுமதி வழங்கும் வழக்கம் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா, போர் சூழ்நிலைகளில் அல்லது கடமைக்கு உட்பட்ட எந்தவொரு செயலுக்கும் ராணுவ வீரர்களுக்கு பண வெகுமதி அளிக்கும் முறை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சோபியான் மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த போலி என்கவுண்டரில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தால் வழங்கப்படும் 20 லட்சம் ரூபாய் பணத்திற்காக அவர்கள் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
Comments