டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்த குடியரசுக் கட்சியினர்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கும் 2வது முயற்சியை ஜனநாயக கட்சியினர் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினர்.
டிரம்ப்பின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்த அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் அரசியலமைப்பின் 25வது திருத்தத்தை செயல்படுத்தவும், டிரம்ப் கடமையைச் செய்யத் தகுதியற்றவர் என்ற அடிப்படையில் துணை அதிபர் பென்ஸ், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினர் தீர்மானத்தை தோற்கடித்துள்ளனர்.
Comments