தொடங்குகிறது தடுப்பூசி வினியோகம்...
புனே நகரில் இருந்து தடுப்பூசி வினியோகம் இன்று தொடங்குகிறது. விமான நிலையங்களில் மருந்துகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி 16-ந் தேதி தொடங்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோவி ஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த மருந்தை மக்களுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ள நிலையில், சீரம் நிறுவனம் மருந்துகளை வழங்க தயார் நிலையில் உள்ளது.
புனேவில் உள்ள மருந்து கிட்டங்கிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு மருந்து அனுப்பப்பட உள்ளது.
கிட்டங்கிகளில் இருந்து மருந்துகளை விமான நிலையத்திற்கு கொண்டு சென்று,அங்கிருந்து ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு செல்லப்படும் என்றும், இன்று முதல் வினியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் மருந்துகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.விமானம் மூலம் ஒவ்வொரு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
அங்கு உள்ள கிட்டங்களில் மருந்தை வைத்து,பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் வேறு கிட்டங்கிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments