ரஷியாவில் குளிர்காலங்களில் வீட்டில் இருந்தே பாரம்பரிய தொப்பிகள் தயாரிக்கும் மூதாட்டிகள்
ரஷியாவில் குளிர்காலத்தையொட்டி மூதாட்டில் வீட்டில் இருந்தவாரே பாரம்பரிய தொப்பிகள் மற்றும் மேட் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர். சைபீரிய மாகாணம் YALUTOROVSK வில் கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளூர் தொழிலதிபரால் உருவாக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக உள்ள மூதாட்டிகள் கைப்பின்னல்கள் மூலம் மேட்டை உருவாக்குகின்றனர்.
அலங்காரம் செய்யப்பட்ட பாரம்பரிய தொப்பிகளையும் அவர்கள் தயாரிக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. நடப்பாண்டு தங்களது உற்பத்திப் பொருட்களின் சராசரி கொள்முதல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments