பொங்கல் பரிசு வாங்காமல் விடுபட்டவர்களுக்கு ஜன 18 முதல் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும் - தமிழக அரசு

0 5717

2500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 25 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கடந்த 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், 13 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் வழங்க ஏதுவாக 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை  வழங்க வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் அறிவித்துள்ளார். பொங்கல் துணிப்பை பெறாதவர்களுக்கும் அதனை வழங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments