ஜம்மு-காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் தால் ஏரியின் ஒரு பகுதி பனிக்கட்டியாக உறைந்தது
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காரணமாக அங்குள்ள புகழ்பெற்ற ஏரியான தால் ஏரியின் ((Dal Lake)) ஒரு பகுதி பனிக்கட்டியாக உறைந்து காட்சியளிக்கிறது.
ஸ்ரீநகரில் மைனஸ் 4 டிகிரி செல்சியசாக தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. இதனால் குளிரிலிருந்து தப்ப பொது இடங்களில் நெருப்பை மூட்டி மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர்.
ஜம்முவின் பல்வேறு பகுதிகளிலும் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். கடும் குளிருக்கு மத்தியிலும் ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் இந்திய வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments