தேசத் துரோக குற்றச்சாட்டு வழக்கில் கங்கனாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை 25ம் தேதி வரை நீட்டிப்பு

0 1352
தேசத் துரோக குற்றச்சாட்டின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கைது நடவடிக்கையிலிருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பை 25ம் தேதி வரை மும்பை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

தேசத் துரோக குற்றச்சாட்டின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கைது நடவடிக்கையிலிருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பை 25ம் தேதி வரை மும்பை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

இணையதளத்தில் வெளியிடும் பதிவு மூலம் சமூகத்தில் மதரீதியிலான பதற்றத்தையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சான்டல் மீது பாந்த்ரா காவல்நிலையத்தில் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் 2 பேரும் தாக்கல் செய்த மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது மனு மீதான விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், புதிதாக 2 பேருக்கும் சம்மன் அனுப்பக் கூடாதென காவல்துறைக்கு உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments