உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 96 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இருந்து பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை வரை 90 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கேரளா சென்ற மத்திய குழுவினர், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலசாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பறவைக் காய்ச்சல் நிலவரம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
Comments