புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

0 8767

புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா ஆகியவற்றை வருகிற 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், திண்டுக்கல் மாவட்டம் பெரியகாளையம் புதூர், உலகம்பட்டி, ஏ.வெல்லோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம் (Aleseebam) செம்படமுதூர், குப்பச்சிபாறை, திருப்பூர் மாவட்டம் அழகுமலை ஆகிய இடங்களில் நடத்த அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, சிவகங்கை மாவட்டம் சிராவயல், கண்டிப்பட்டி, குன்றக்குடி ஆகிய  இடங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியளிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments