போகிக்கு பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் - சேலம் விமான நிலைய இயக்குநர் வேண்டுகோள்
போகிப் பண்டிகையின்போது சேலம் விமான நிலையம் அருகே டயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய இயக்குனர் ரவீந்திர சர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்களை எரிக்கும் போது ஏற்படும் கரும்புகையினால் விமானங்கள் தரை இறங்குவது, மேலே எழும்புவதில் சிரமம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ரப்பர் உள்பட பழைய பொருட்களை எரிக்கும் போது வரும் புகையினால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்படும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டுமென சேலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments