சட்டவிரோத கட்டிட விவகாரம் : சோனு சூட் மீது 13ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை

0 1232
சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியுள்ளதாக குற்றம்சாட்டி, மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், திரைப்பட நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக 13ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாதென மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூகு கடற்கரையில் உள்ள இல்லத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியுள்ளதாக குற்றம்சாட்டி அண்மையில் சோனு சூட்டுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து சோனு சூட் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை 13ம் தேதி வரை ஒத்தி வைத்த மும்பை உயர்நீதிமன்றம், அதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாதென உத்தரவிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments