சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை... பணிச்சுமை காரணமா?
அரியலூர் மாவட்டம் பழூர் காவல்குடியிருப்பில் வசித்து வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பழூர் காவல்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த ஜெகதீசன் என்பவர், பணிக்கு வராததால், காவல்நிலையத்தில் இருந்து அவரது செல்போனுக்கு அழைத்துள்ளனர். அவர் அழைப்பை ஏற்காததை அடுத்து, எதிர்வீட்டில் உள்ள காவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த காவலர் ஜெகதீஸ் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஜெகதீஸின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments